பீட்ரூட்டில் சுவையான பாயசம் பண்ணுவது எப்படி?

முதலில் மிக்சியில் 4 பீட்ரூட்டை நன்கு வழுவழுப்பாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் ஊற்றவும். நெய் காய்ந்தவுடன் அதில் நறுக்கிய முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் பீட்ரூட்டை சேர்த்து கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். 5 நிமிடத்திற்கு பிறகு அதில் பால் சேர்த்து 15 நிமிடம் சமைக்கவும். அடுத்து அதில் ¾ கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

ஏழு நிமிடத்திற்கு பிறகு சிறிது நெய் சேர்த்து இறக்கினால் சூடான பீட்ரூட் பாயசம் தயார். கடைசியில் பீட்ரூட் பாயாசத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேல் முந்திரியை அலங்கரித்து சூடாக பறிமாறுங்கள்.