இந்திய குடியரசு தின விழா: இங்கிலாந்து பிரதமர் தலைமை விருந்தினர்

ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். இது இரு தரப்பு உறவில் புதிய சகாப்தம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் கூறுகையில், இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் விடுத்துள்ள அழைப்பை, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.