காரிலேயே மூதாட்டியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற ஆட்சியர்

ஃபாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி தடி ஊன்றியபடி மாவட்ட ஆட்சியரை சந்திக்க நுழைவு வாயில் அருகே காத்திருந்தார். அப்போது அலுவலக வளாகத்துக்குள் காரில் வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், வழியில் மூதாட்டியை பார்த்ததும் திடீரென காரை நிறுத்துமாறு கூறினார்.

இதை கேட்ட மாவட்ட ஆட்சியர், வீட்டுக்கு எப்படி செல்வீர்கள் என கேட்டபோது “நடந்துதான் போக வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார் மூதாட்டி. இதையடுத்து தனது காரிலேயே மூதாட்டியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்ற ஆட்சியர் அன்பழகன், அங்கிருந்தபடி அவரது புகார் குறித்து விசாரிக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, செல்பேசியில் வீட்டு உரிமையாளரை அழைத்துப் பேசிய காவல்துறையினரிடம் “ஆட்சியர் அளவுக்கு செல்வாங்க என நினைக்கலை. ஒரு வாரத்துக்குள் மொத்த பணத்தையும் தருகிறேன்” என்று வீட்டு உரிமையாளர் உறுதியளித்திருக்கிறார்.

இதன் பிறகு, “பாட்டி, விரைவில் உங்கள் பணம் வந்து விடும்” என்று கூறிய ஆட்சியர், தனது கையில் இருந்த ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்து பாட்டியிடம் கொடுத்து விட்டு புறப்பட்டார். அவரது இந்த செயலை உள்ளூர்வாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர்