வீட்டிற்கோ அல்லது நிறுவனத்துக்கோ சோலார் பேனல் அமைக்க விருப்பவர்களுக்கு மத்திய அரசு 40 சதவீதம் மானியம் தொகையை வழங்குகிறது. இந்த மானியம் Ministry of New and Renewable Energy என்ற அமைச்சகத்தினால் வழங்கப்படுகிறது. மேலும் இந்த DISCOM என்ற நிறுவனம் தான் சோலார் பேனலை விநியோகம் செய்கின்றது.
சோலார் பேனல் மானியம் பெறுவதற்கு அனைவருமே விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
பாஸ்போட் அளவுள்ள புகைப்படம்
ஆதார் கார்டு
மின் அட்டை
1k வாட்ஸ் முதல்– 3k வாட்ஸ் வரை அப்ளை செய்ப்பவர்களுக்கு = 40% மானியம் வழங்கப்படுகிறது.
4k வாட்ஸ் முதல் – 10k வாட்ஸ் வரை அப்ளை செய்ப்பவர்களுக்கு = 20% மானியம் வழங்கபடுகிறது.
10k வாட்ஸ் வரைக்கும் மானியம் தொகை பெற்று சோலார் பேனல் அமைத்துக்கொள்ள முடியும். 10k வாட்ஸ் மேல் மானியம் தொகை வழங்கப்படாது.
40% மானியத்துடன் வீட்டிற்கு சோலார் அமைக்க விருப்பவர்கள் https://solarrooftop.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் அவரில் நீங்கள் இந்த மானியம் பற்றிய முழுமையான விவரங்களை பெறமுடியும். மேலும் மானியம் பெற ஆன்லைன் மூலம் இந்த இணையதளம் வழியாக நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.



