தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நாளை வரை இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஏப்ரல் 4ம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பச்சலனத்தால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.