செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு !

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாசிக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் செவ்வாய் கிரகத்தில் வாசிக்க மக்கள் சில பேர் நிலம் கூட வாங்கியுள்ளனர்.மற்றும் அங்கு உள்ள சூழ்நிலை குறித்து உலக நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கிளை நிறுவனமான ஜெட் புரோஃபல்யூஷன் லேபரட்டரி ‘இன்சைட் ரோவர்’ என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. 2ஆண்டுகளாக இந்த சிறிய கருவி செவ்வாய் கிரகத்தில் தான் உள்ளது.

இன்சைட் ரோவர் அனுப்பிய தகவலில் பூமியில் ஏற்படும் நில அதிர்வு போல செவ்வாய் கிரகத்திலும் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.