காஜல் அகர்வாலின் த்ரில்லிங் வெப் தொடர் !

காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி,டேனியல் பாலாஜி நடிப்பில் இந்த வாரம் ஹாட் ஸ்டாரில் வெளியான வெப் தொடர் லைவ் டெலிகாஸ்ட். இந்த வெப் தொடரை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார், பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

ஹாரர் மற்றும் திரில்லர் கதைகளத்தை கொண்டு வெளிவந்துள்ள இந்த வெப் தொடர் 7 எபிஸோடுகளை கொண்டுள்ளது.காஜல் அகர்வால் போல்ட் ஆக நடித்துள்ளார்.

ஒரு பேய் வீட்டில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்குவதற்காக ஜெனிஃபர் மற்றும் குழுவினர் செல்கின்றனர். அப்போது அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் தான் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் கதை.