தக்காளியில் இருக்கும் அழகின் ரகசியம் !

தக்காளியை பயன்படுத்தி அழகை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம். தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

சருமத்தின் நிறம் மாறுவதற்கு சிறிதளவு காய்ச்சாத பாலில் நறுக்கிய பாதி தக்காளியை நனைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் போல் செய்ய வேண்டும். மசாஜ் போல் செய்த பிறகு 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதை நீரால் உடனே வாஷ் செய்ய கூடாது. டவல் எடுத்து ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.

1 ஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 1 ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.இந்த கலவையில் பாதியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியில் நனைத்து முகத்தில் மசாஜ் போல் மெதுவாக செய்து 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.