இன்று திமுக – CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் CPIM மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, திமுக (DMK) கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதனை CPIM ஏற்றுக் கொண்டதால், ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அதேபோல, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.