வெயிலால் சருமம் எரியுதா?சில டிப்ஸ்

இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதிக அளவிலான சூரியக்கதிர்கள் உடலில்படுவதால் தோல் சிவந்து, தடித்து காணப்படும்.சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்.

கேரட்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் தினமும் உட்கொள்வது சருமம் மற்றும் சரும எரிச்சலுக்கு மிகவும் நல்லது.வாரத்திற்கு 3 முறை கேரட் ஜூஸ் சாப்பிடலாம் மற்றும் கேரட்டில் தயாராகும் கிரீம் போற்றவற்றை பயன்படுத்தலாம்.

கற்றாழை
ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.இந்த கற்றாழையில் இருக்கும் ஜெல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடல் சூடு தணியும்.காற்றாழையில் இருந்து நேரடியாக அதன் ஜெல்லை எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.