என் ஆதரவு விவசாயிகளுக்கே – அரவிந்த் கெஜ்ரிவால்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதிலிருந்தே அவர்களுக்கு ஆதரவாக உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதலமைச்சருக்கு பதிலளித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் டெல்லி முதலமைச்சர் நடித்துவருகிறார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாய பொருள்களை விற்பனை செய்யும் கூடத்திற்கு கமிட்டி அமைப்பதாக உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, டெல்லியில் விவசாய பண்ணை சட்டத்தையும் அறிவித்துவிட்டு, தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து நாடகத்தை முன்னெடுக்கிறார் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த தொடங்கியதிலிருந்தே நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன். நான் மத்திய அரசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். தற்போது டெல்லியில் உள்ள அரங்கங்களை சிறைகளாக மாற்ற அனுமதித்துள்ளேன. தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் , “விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், எப்படி இருப்பினும் இறுதியில் வெற்ற விவசாயிகளுக்குத்தான்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கெஜ்ரிவால் இன்று விவசாயிகளுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.