உதிர்ந்த தலைமுடி மீண்டும் வளர இதோ சில டிப்ஸ் !

முடி உதிர்வு பிரச்சனை இருக்குமாயின் அதற்கு சில பராமரிப்புகளை மேற்கொண்டால் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும்.இதற்கு அழகுநிலையம் செல்ல தேவை இல்லை.

வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு தலைமுடியை முறையாக பராமரிக்கலாம்.

கற்றாழை கூந்தலுக்கும் சருமத்துக்கும் மிக சிறந்தது.கற்றாழை ஜெல் தலைமுடிக்கு மிக சிறந்தது இதை கொண்டு தலைமுடி கு பேக் போட்டு 15 நிமிடம் கழித்து அலச வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் முடி கருமையாக வளரும்.

கறிவேப்பிலை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளவும் இதனுடன் செம்பருத்தி இலை ஒரு கைப்பிடி .செம்டம்பருத்தி பூவின் இதழ் ஒரு கைப்பிடியளவு எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.இந்த பேக் ஐ தலைமுடியில் போட்டு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும்.தலையை இரவு முழுவதும் அப்படியே வைத்து, காலையில் தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு செய்து வர தலைமுடி உதிர்வது குறைந்து மீண்டும் தலைமுடி வளரும்.