சிறுநீரகம் ,உடலில் இருக்கும் கழிவுகளை பிரித்து வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவு கிறது.கழிவுகளை வெளியே அனுப்பும் போது உப்பு, வேதிப்பொருள் வெளியேறும்.
உப்பு சிறு துகள்களாக மாறி சிறுநீரகத்தில் தேங்கி விடுகிறது. பிறகு படிப்படி யாக கற்களாக படிந்து விடுகிறது. சில துகள் கல்லாக மாறி உறுப்பில் அடைப்பை ஏற்படுத்தி சிறு நீரகத்தின் பணியை பாதிக்கிறது.
இதற்கு நம் உணவில் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் போதும் .கல் சிறிதாக இருந்தால் இதில் சரியாகிவிடும் .பெரிய அளவில் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.பொதுவாக இதை அனைவரும் சாப்பிடலாம்.
முதலில் வாழைத்தண்டு ,இதை சிறு துண்டுகளாக நறுக்கி கொஞ்சம் தயிர் கலந்து சாப்பிடலாம்.இது சிறு கற்களை கரைக்க உதவுகிறது .மேலும் வாழைத்தண்டு ஜூஸ் வாரம் 2 முறை எடுத்துக்கொள்ளலாம்.
சிறுபீளை செடியை கழுவி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கல் பிரச்சனை சரியாகும்.



