உங்களுக்கு பாத வெடிப்பு இருக்கா இனி கவலை வேண்டாம் !

[ File # csp7414043, License # 1535755 ] Licensed through http://www.canstockphoto.com in accordance with the End User License Agreement (http://www.canstockphoto.com/legal.php) (c) Can Stock Photo Inc. / Elenathewise

நாம் முகத்தை பராமரிக்க நிறைய பொருட்கள் எடுத்துக்கொள்வோம்.ஆனால் பாதத்திற்கு அதிக முக்கியத்துவம் நாம் கொடுப்பதில்லை.நம் முழு பாரத்தையும் தாங்க கூடியது பாதம் தான்.இதை பராமரிக்க நாம் அழகு நிலையம் செல்ல தேவை இல்லை.வீட்டிலிருந்தே பாதத்தை அழகாக பராமரிக்கலாம்.

முதலில் கால்களை சுடுநீர் மற்றும் கொஞ்சம் உப்பு போட்டு கழுவி வர காலில் இருக்கும் கிருமிகள் அழிவதோடு நமக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

ஒரு டபிள் பாதி அளவு மிதமான சுடுநீர் வைத்து அதில் கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும் பிறகு அதனுடன் அரை மூடி எலுமிச்சைசாறு சேர்ந்து அதனுள் இரண்டு கால்களையும் 15 நிமிடம் வைக்க வேண்டும்.

காலில் அதிகமாக இறந்த செல்கள் சேருவதால் தடிமன் ஆகி அது வெடிப்பை உண்டாக்கும்.இதை சரி செய்ய கால்களை அடிக்கடி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

ஸ்க்ரப் செய்த பிறகு நன்றாக கால்களை துடைத்து விட்டு ஈரப்பதம் போகாமல் இருக்க கிரீம் தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு தடவலாம்.மேலும் முகத்திற்கும் போடும் பப்பாளி பழங்களையும் கூழாக்கி பாதங்களில் தடவி வந்தால் பாதம் பொலிவாக இருக்கும்.