தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பீர் தொழிற்ச்சாலை !

தொல்பொருள் ஆராய்ச்சியில் 1000 கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள பொருட்கள் கிடைக்கும் ஆனால் தற்போது பண்டைய எகிப்திய நகரமான அபிடோஸிஸ் 5000 ஆண்டுகள் பழமையான பீர் தொழில்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்ச்சாலையில் கிட்டத்தட்ட 1000 லிட்டர்க்கு மேல் பீர் தயாரித்தது தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.பண்டைய எகிப்திய நாகரிகத்தில் பீர் என்பது பிரதானமான பானமாக செயல்பட்டுள்ளது.

பண்டைய எகிப்திய காலத்தில் அபிடோஸிஸ் முக்கிய நகரமாக இருந்திருக்கிறது.காலம் செல்ல செல்ல அதன் புகழ் மறைந்து பாலைவனமாக மாறியுள்ளது.

முன்னதாக இங்கு நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் பண்டைய அரசர்களுடைய கல்லறைகள் கண்டுபிடிக்கபட்டது.தற்போது இந்த ஆராய்ச்சியில் கி.மு 3100 ஆண்டை சேர்த்த பீர் தயாரிக்கும் தொழிற்ச்சாலை இருந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.