சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை !

சக்ரா திரைப்படத்தில் விஷால் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளார்.மேலும் ஆனந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 19-ம் தேதி சக்ரா திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் இருப்பது,இந்த படத்தின் கதையை இயக்குநர் ஏற்கனவே தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டதாகவும் தற்போது விஷால் தயாரிப்பில் மற்றும் அவர் நடிப்பில் தயாரித்துள்ளது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மனு குறித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி19-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.