வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு செய்யும் 3 ஃபேஸ் பேக்குகள் !

முகம் அழகாக இருந்தால் நமக்கு தனியொரு நம்பிக்கை வரும்.மேலும் நம் உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளுவது நமது கடமை.வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு முகத்தை பளீச் என்று வைத்துக்கொள்ளலாம்.

இதில் முதல் பேக்,கொத்தமல்லி இலை மற்றும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக் .முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த பேக் போட்டு வர புள்ளிகள் மறைந்து சருமம் அழகாக இருக்கும்.முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க கொத்தமல்லி இலை சாறு சிறந்தது.கொத்தமல்லி இலைகளை இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் கலந்து நன்றாக பேஸ்ட் செய்யவும்.இதை முகத்தில் தடவி இரவில் முழுதும் வைத்து காலையில் கழுவ வேண்டும்.

அடுத்தது,அனைவர்க்கும் தெரிந்த கடலை மாவு மற்றும் தயிர் பேஸ் பேக்.கடலை மாவுக்கு முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.மேலும் தயிர் பயன்படுத்தும் போது பருக்கள் மறையும்.2 ஸ்பூன் கடலை மாவு ,சிறிதளவு தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் போட்டு கழுவ வேண்டும்.முகம் மிருதுவாக இருக்கும்.மேலும் கழுத்து பகுதியில் தடவி வர கழுத்து பகுதியில் இருக்கும் கருமை மற்றும் மருக்கள் போன்றவைகள் மறையும்.

அடுத்தது குங்குமப்பூ பேஸ் பேக்.இதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், செலினியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் மற்றும் வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், நியாசின் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட வைட்டமின்கள் உள்ளன.இந்த பேக் செய்ய ஒரு மூன்று முதல் நான்கு குங்குமப்பூவை எடுத்து இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் ஒரே இரவில் ஊறவைக்கவும்.

அந்த குங்குமப்பூ ஊறிய தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பால், சிறிது சர்க்கரை மற்றும் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதை முகத்தில் போட்டு 1 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.இப்படி செய்து வர முகத்தில் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.