மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது !

Neet-2021

இந்திய மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் 16.14 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.இந்த தேர்வு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகள், ஆயுர் வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற படிப்புகளில் சேர்வதற்கான தேர்வாகும்.

Also Read : காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம்

நாடு முழுவதும் 202 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னையில் 33 மையங் களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது.மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

Also Read : பணி வழங்குநரின் கவனத்தைக் கவரும் வகையில் ரெஸ்யூமை வேண்டுமா?

(National Eligibility Entrance Test -2021)