வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த முட்டை விலை!!!

உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை கடும் உயர்வை சந்தித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நாமக்கல் பண்ணையில் ஒரு முட்டை 5.25 காசுகளாக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளதையடுத்து சென்னையில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் கொள்ளை லாபம் பார்க்கவா? என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு திட்டம் தடைபட்டது. இதையடுத்து, சத்துணவு பொருட்கள் மாணவர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.

மேலும், கடந்த மாதம் முதல் மாணவர்களுக்கு தலா 10 முட்டைகள் வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்க உத்தரவிட்டது. இந்நிலையில், உற்பத்தி குறைந்து முட்டை விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை பயன்படுத்தி, மாணவர்களுக்கு தலா 10 முட்டை சத்துணவு திட்டத்தில் வழங்குவதை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கொள்ளை லாபம் பார்க்க வழி செய்துகொண்டதாகவே சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.