Hijab Row: மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள்

கர்நாடகாவில் பியூ கல்லூரி
கர்நாடகாவில் பியூ கல்லூரி

Hijab Row: கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரம் பெரிதாக்கிக்கொண்டு இருக்கிறது. அங்கு வரிசையாக பல்வேறு கல்லூரிகளில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் இந்து மாணவர்கள் சிலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து மாணவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவிகள் எதிராக இந்த எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

அது மட்டுமின்றி இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்பிற்கு வந்து போராட்டமும் நடத்தி உள்ளனர்.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால், நாங்கள் காவி துண்டு அணிவோம். அவர்கள் மத அடையாளங்களோடு வகுப்பறைக்கு வர கூடாது. அவர்கள் வந்தால் நாங்களும் வருவோம் என்று கூறி இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் பலர் போராடி வருகிறார்கள். இவர்களில் பலர் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடுப்பி, சிக்மங்களூர், மங்களூர், சிவமொக்கா போன்ற பகுதிகளில் உள்ள பியூ கல்லூரிகளில் இந்த மோதல் நடந்து வருகிறது.

இதையடுத்து கர்நாடகாவில் பல்வேறு பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் கல்லூரி நிர்வாகம் தடுத்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே துரத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதையும் படிங்க: Urban local body election: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

இது தொடர்பான வீடியோக்கள் கூட நேற்று இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பியூ கல்லூரி மட்டுமின்றி யுஜி, பிஜி கல்லூரிகளிலும் இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. உடுப்பியில் உள்ள குண்டபுரா அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நுழைய தடை விதைக்கப்பட்டுள்ளது. நேற்று 40க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி அளிக்காமல் வெளியே வைத்து அவர்களை தலைமை ஆசிரியர் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். அவர்களை உள்ளே அனுமதிக்கும் வரை நாங்களும் போராடுவோம் என்று கூறி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து போராடி வருகிறார்கள்.

இதனால் அங்கு பெரிய பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மாணவிகளை இஸ்லாமியர்கள் என்பதால் வெளியே நிறுத்தி வைத்துள்ளனர். அப்படி என்றால் நாங்களும் இஸ்லாமியர்கள்தான். அவர்களை உள்ளே விடும் வரை நாங்கள் உள்ளே வர மாட்டோம் என்று கூறி மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். இதனால் அங்கு இந்து – இஸ்லாமிய மாணவ, மாணவியர் இடையே மிகப்பெரிய பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை விடுமுறை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Meteorologist mom: கைக்குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசித்த பெண்

 Hijab Row in Karnataka, College declared holiday