IPL 2022 ஏலம்: 10 அணிகளுக்கும் பிசிசிஐ கூறிய விதிமுறைகள்!

IPL 2022
10 அணிகளுக்கும் பிசிசிஐ கூறிய விதிமுறைகள்

IPL 2022: பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 ஏலம் சம்பந்தமாக 10 அணிகளும் பின்பற்ற வேண்டிய சில கட்டாய விதிகளை பிசிசிஐ வகுத்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 சீசனுக்கு முன்னதாக மெகா ஏலத்தை சுமூகமாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பல வழிகளை பின்பற்றி வருகிறது. பெங்களூரில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் இடம் பெற உள்ளன.

புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் உட்பட 10 உரிமையாளர்கள் தங்கள் அணிகளை உருவாக்க உள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பயோ பபிள் முறையில் ஏலம் நடைபெற உள்ளது.

ஐபிஎல் 2022 ஏலத்தில் அனைத்து அணிகளும் பின்பற்ற வேண்டிய விதிகள்:

  • ஐபிஎல் 2022 ஏலம் பயோ பபிளில் நடைபெறும்.
  • பிப்ரவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், உரிமையாளர்களுடன் வருபவர்கள் கோவிட்-19 நெகடிவ் RT-PCR சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். BCCI- அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனம் மூலம் சோதனை நடத்தப்படும்.
  • இந்த ஏலத்தில் அணிக்கு ரைட் டு மேட்ச் (RTM) விருப்பம் இருக்காது.
  • பழைய எட்டு ஐபிஎல் அணிகளால் 3 வீரர்கள் மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்னதாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து அணிகளும் ஒரு புள்ளியில் இருந்தே ஏலத்தை தொடங்கும்.
  • ஐபிஎல் 2022 மொத்த ஏலத்தொகை ரூ.80 கோடியில் இருந்து ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வீரர்களை அணியில் எடுக்க இந்த தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த 15 நாட்களில் வெளிநாட்டுப் பயணங்கள் செய்த பிறகு இந்தியா திரும்பியவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • பிப்ரவரி 11 அன்று ஹோட்டலுக்கு வருபவம் அணி உரிமையாளர்களை பிசிசிஐ உன்னிப்பாகக் கண்காணிக்கும். அவர்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர்.
  • பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 2022 ஏலத்தை சுமூகமாக நடத்துவதற்காக காலை 12 மணி முதல் 7 மணி வரை சோதனை நடத்தப்படும்.
  • பங்கேற்பாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களின் முழு விவரங்களையும் பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • ஏலம் நடைபெறும் இடத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: Hijab Row: மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள்