Meteorologist mom: கைக்குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசித்த பெண்

Meteorologist Mom
கைக்குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசித்த பெண்

Meteorologist mom: அமெரிக்காவில் வீட்டில் இருந்து பணிபுரியும் பெண் வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் தொலைக்காட்சி நேரலையில் தோன்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மில்வாக்கி நகரைச் சேர்ந்தவர் ரெபாக்கா ஷுல்ட். வானிலை ஆராய்ச்சியாளரான இவர், ‘சிபிஎஸ் 58 நியூஸ்’ என்ற தொலைக்காட்சிக்கு தினமும் காலையில் வானிலை செய்திகளை தொகுத்து வழங்கி வருகிறார். கரோனா பரவல் காரணமாக அவர் தற்போது வீட்டில் இருந்து பணிபுரிகிறார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல தொலைக்காட்சி நேரலையில் வானிலை அறிக்கையை வாசிக்க அவர் ஆயத்தமாகி கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது மூன்று மாதக் குழந்தையின் அழுகுரல் ரெபாக்காவுக்கு கேட்டுள்ளது. எதை பற்றியும் யோசிக்காத ரெபாக்கா, உடனடியாக தனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வானிலை அறிக்கை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நேரலை என்பதால் நிகழ்ச்சி அப்படியே ஒளிபரப்பானது.

இதையும் படிங்க: Ration shop: ரேஷன் பொருள் தரமில்லை என்றால் ஊழியர் திருப்பி அனுப்பலாம் – தமிழக அ ரசு

நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஏராளமானோர், ரெபாக்கா கைக்குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசிக்கும் வீடியோவையும், புகைப்படத்தையும் தங்கள் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்தனர். சில மணிநேரங்களிலேயே இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. அலுவலக வேலையில் இருந்தபோதிலும், குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்த ரெபாக்காவின் செயலுக்கு ஆயிரக்கணக்கானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ரெபாக்கா கூறும்போது, “வானிலை அறிக்கையை தொகுத்து வழங்க வேண்டும் என்பதற்காக சிறிது நேரத்துக்கு முன்புதான் எனது குழந்தையிடம் இருந்து எழுந்து வந்தேன். ஆனால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நொடிகளே இருந்த போது அவள் எழுந்து விட்டாள். நிகழ்ச்சி முடிய 10 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும் என்பதால் அவளை சமாதானப்படுத்துவது முக்கியம் என முடிவு செய்தேன். அதனால்தான், நேரலை நிகழ்ச்சியில் அவளை தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன்.

இதனை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என குழப்பம் இருந்தது. ஆனால், அனைவருமே எனது செயலுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், எனது குழந்தைக்கும் அதிக ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள்” என்றார்.

Meteorologist mom wins hearts for carrying her baby while presenting weather forecast

இதையும் படிங்க: Husband for sale: கணவரை விற்க விளம்பரம் கொடுத்த மனைவி..!