கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை ஆறுகளில் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநில மலைநாடு பகுதி என்று அழைக்கப்படும் ஹாசன் சிக்மங்களூர் குடகு போன்ற பகுதிகளில் இடைவிடாது கடந்த ஒரு வார காலமாக நல்ல மழை பெய்து வருகிறது.

இதன் அடிப்படையில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள துங்கா பத்ரா ஹேமாவதி ஆறுகள் மற்றும் மங்களூர் மாவட்டத்தில் உள்ள நேத்ராவதி குமாரதாரா போன்ற ஆற்றிலும் மற்றும் இப்பகுதியில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிக்மகளூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் ஆகிய பாப புடன் கிரி முல்லையன் கிரி கெம்மன்குண்தி ஆகிய பகுதிகளில் கூடுதலாக மழை பிடிப்பின் காரணமாக மழை பெய்து வருகின்றன இதனால் சிக்மங்களூர் மாவட்டம் தரிகெரெ தாலுகா கள்ளத்தி அருவியில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அருவியில் தண்ணீர் கொட்டும் காட்சி பால் போன்று கண்கொள்ளாக் காட்சியாகும் இந்த காட்சியை பார்ப்பதற்கு என மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர் குறிப்பாக கடந்த 3 நாட்களாக இடைவிடாத பலத்த மழையின் காரணமாக கள்ளத்தி அருவி நிரம்பி வழியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அருவியில் குளிக்க தடையும் திக்கபட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.