புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் பல கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என்றும், சென்னையில் நட்சத்திர விடுதிகள் உள்பட அனைத்து விதமான உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு இரவு 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.



