இலவங்க பட்டையின் மருத்துவ குணங்கள் தெரியுமா !

இலவங்க பட்டை இதை பெரும்பாலும் நாம் காரசாரமான உணவுகளில் பயன்படுத்துவோம்.இதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது.இந்த பட்டையின் வாசனை உணவுக்கு தனி ருசி கொடுக்கும்.

இலவங்க பட்டையை போடி செய்து வைத்து கொள்ளலாம்.மேலும் நம் உண்ணும் ஜூஸ் அல்லது டீ போன்றவற்றில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் போட்டு குடித்து வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த இலவங்க பட்டை உணவில் சேர்ப்பதன் மூலம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

மேலும் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தேன் மற்றும் இலவங்க பட்டை தூள் இரண்டையும் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல ஒரு மாற்றம் கிடைக்கும்.மேலும் இது முக பரு,சரும பிரச்னைகளிருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.