கழுத்து பகுதிகள் கருமையாக இருக்கா இதோ சில டிப்ஸ் !

பொதுவாக நாம் முகத்தை மட்டும் நன்றாக பராமரிப்போம்.ஆனால் கழுத்து பகுதிகளில் கருமை நிறமாக இருக்கும்.நாம் முகத்தை பராமரிக்க போடும் பேக் ஐ பின் கழுத்துக்கும் போடவேண்டும்.மேலும் உடல் எடை அதிகம் இருப்போருக்கு கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.மற்றும் கழுத்தில் அணியும் நகைகளாலும் நிறம் மாறும்.

சிறிதளவு எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரையைச் சேர்த்து கழுத்து பகுதிகளில் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்து வேண்டும்.பிறகு 30 நிமிடம் களைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கருமை நிறம் மெல்ல மறைய தொடங்கும்.

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்பு அந்த துண்டுகளோடு சிறிதளவு வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.இந்த பேஸ்ட் ஐ கருமை இருக்கும் பகுதிகளில் போட்டு 20 கழித்து கழுவ வேண்டும்.

தினமும் குளிக்கும் பொது கடலை மாவு கொண்டு கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் மெல்ல மெல்ல நிறம் மாறும்.கடலைமாவுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம்.இது நம் உடலுக்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.