கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள் !

கருஞ்சீரகம் பல மருத்துவ குணம் கொண்ட தாவரங்களின் ஒண்று. கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவில் வளரக்கூடிய செடியகும்.இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும்.

இதில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. மேலும் , ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும்.

இதயநோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது.கருஞ்சீரகம் நம்முடைய பசியை சரியான இடைவெளியில் தூண்டிவிடும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது.

தலைவலிக்கு கருஞ்சீரகத்தை அரைத்து பற்று போடலாம்.
கருஞ்சீரகத்தை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து வீக்கங்களில் தடவினால் வீக்கம் கரையும்.