இந்த இறுதி ஆண்டில் லாபத்தை அள்ளிய எச்.சி.எல். டெக்னாலஜிஸ் !

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,982 கோடி லாபம் ஈட்டியுள்ளது.இந்தியாவின் 3வது பெரிய சாப்ட்வேர் சேவைகள் வழங்கும் நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

2020 டிசம்பர் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,982 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 26.7 சதவீதம் அதிகமாகும்.இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 இடைக்கால டிவிடெண்டாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.