கரோனா தடுப்பூசி போட்டு கொண்ட 29 பேர் பலி – நார்வே !

கரோனா தொற்று பரவ தொடங்கி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டது.மேலும் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த முதல் முதலில் பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியது.தற்போது தடுப்பூசி போடும் பணி உலகம் எங்கும் நடந்து வருகிறது.

பைசர் மற்றும் பயோஎன்டேக் தயாரித்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த அனுமதி கிடைத்தது.பிரிட்டன்,அமெரிக்கா,சவூதி அரேபியா,சிங்கப்பூர்,மேலும் இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தன.

இந்த நிலையில் நார்வே நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.தடுப்பூசி போட்டுக்கொண்ட 75 வயதை கடந்த முதியவர்கள் வாந்தி,மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டு உயிர் இழந்தனர்.முதியவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தடுப்பூசி பலன் அளிக்கவில்லை என்று அந்த நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.