பற்களை பாதுகாக்க மற்றும் வாய்துர்நாற்றம் போக செய்யுங்கள் ஆயில் புல்லிங் !

நாம் உண்ணும் உணவுகள் நம் வாய் வழியாகவே நம் உடலுக்குள் செல்கின்றன. வாயை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்தின் பெரும்பங்கு நிறைவேறிவிடும்.ஒருவரிடம் பேசும் போதும் வாய் நாற்றம் வராமல் இருக்க நாம் மௌத் ஃப்ரஸ்னர்ஸ் போட்டுக்கொள்கிறோம்.

இதற்கு தீர்வு என்றால் தினமும் காலையில் 15 நிமிடம் செலவழித்தால் வாயை மிகவும் தூய்மையாக பராமரிக்கலாம். வாயினுள் இருக்கும் தீமை செய்யும் கிருமிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் வழிதான் ஆயில் புல்லிங்.

நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்யவேண்டும்.சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 10 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும் உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும்.

இப்படி செய்து வந்தால் வாய்துர்நாற்றம்,ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு,தைராய்டு,சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குறைந்து விடும்.