ஹத்ரஸ் பலாத்காரம் சம்பவம் – குற்றவாளியின் வீட்டில் ரத்தக்கறை படிந்த ஆடைகள் கண்டெடுப்பு

உ.பி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் வீட்டில் ரத்தக் கறை படிந்த ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் ஹத்ரஸ் மாவட்டத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படு நாக்கு துண்டாடப்பட்டு கொல்லப்பட்ட தலித் பெண்ணின் கொலையை ஆளும் பி.ஜே.பி கட்சியும் அதன் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத்தும் சேர்ந்து மூடி மறைக்க செய்தியெல்லாம் இப்பொழுது அம்பலத்திற்கு வருகின்றன.

இப்பொழுது இந்த வழக்கை சிபிஐ போலீஸார் விசாரிக்கின்றனர். அவர்களது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லவ் குஷ் சிகர்வார் என்பவர் வீட்டிலிருந்து ரத்தக் கறையுடைய ஆடைகளை சிபிஐ போலீஸார் கண்டெடுத்தனர்.

அந்த துணியில் இருப்பது பெயிண்ட் தான் ரத்தம் அல்ல என்று நாடகமாடினாலும் ரத்தத்திற்கும் பெயிண்ட்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல சி.பி.ஐ.அதிகாரிகள்.