சொக்க தங்கம் …சொக்க தங்கம் ஜுவல்லரி இந்த பாடல் இவருக்கு பொருந்தும் !

பனங்காட்டு படைகட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ஹரி நாடார்.சென்னையிலிருந்து தேர்தல் பிரசாரத்துக்கு ஆலங்குளம் செல்வதற்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றவரை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இதற்கு காரணம் உடல்முழுதும் அவர் அணிந்திருந்த கண்ணை பறிக்கும் தங்க நகைகள்.

புதிதாக பார்ப்பவர்களுக்கு ஹரியின் கழுத்தில் கிலோ கணக்கில் இருக்கும் நகைகள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்கிற சந்தேகம் வராமல் இருக்காது.அதே சந்தேகத்தில்தான் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் படையினரும் கடந்த 28-ம் தேதி காலை விமான நிலையத்தில் ஹரியை தடுத்து நிறுத்தியுள்ளனர். விசாரணையின்போது ஹரி அணிந்திருக்கும் அணிகலன்கள் யாவும் அசல் 916 தங்கம் என்று கூறியுள்ளார்.

இவர் அணிந்திருந்த நகைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.மேலும் அவர் 3 கட்டமாகப் பரிசோதிக்கப்பட்டு, ஆய்வின் முடிவில் அனைத்தும் ஒரிஜினல் என்பது தெரியவந்தது. மொத்தமாக 3 கிலோ 450 கிராம் எடை கொண்ட நகைகளை அவர் அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவை அனைத்தும் சென்னை ஜி.ஆர்.டி, மற்றும் பீமா ஜூவல்லர்ஸில் வாங்கப்பட்டதாக அதற்கான பில்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வரி செலுத்தினால் நடவடிக்கை ஏதுமின்றி விடுவிப்பதாக வருமானவரித்துறையினர் கூறியதை அடுத்து 1 கோடியே 52 லட்சம் ரூபாய் வரி செலுத்த ஒப்புக் கொண்டார்.