டி டீரீ ஆயில் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா !

டி டீரீ ஆயில் அல்லது தேயிலை மர எண்ணெய் என்பது ஒரு நறுமண மிக்க எண்ணெய் மற்றும் நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட எண்ணெயாகும் .இது மெலலூகா ஆல்டர்ன்போலியா எனும் தேயிலை மரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது.

இந்த தேயிலை மர எண்ணெய் தோளின் மீது வரக்கூடிய பொடுகு, முகப்பரு, பேன், பூச்சிக் கடி, சிரங்குகள், தோலில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகள் மற்றும் பாக்டிரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பயனுள்ள மருந்தாக கருதப்படுகின்றது.

முக பரு வந்து முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால் இந்த எண்ணையை தொடர்ந்து தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.மேலும் தலையில் பொடுகு தொல்லை இருப்பவர்கள் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் டி டீரீ ஆயிலை 3 துளிகள் தண்ணீரில் விட்டு தலையில் தேய்த்து கொள்ளவும்.

பிறகு அரை மணிநேரம் கழிந்து குளித்து விடுங்கள்.இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.இப்போது இந்த எண்ணெய் கலந்த ஷாம்பூ,பேஸ் வாஷ் மற்றும் முக கிரீம்கள் கிடைக்கின்றன அதை பயன்படுத்துவந்தால் சரும பிரச்னை நீங்கும்.