திருச்சியில் கைத்தறி கண்காட்சி விழா!

திருச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை திருச்சி சரகம் சார்பில் கைத்தறி கண்காட்சி தொடக்கவிழா இன்று நடைபெற்றது.இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை திருச்சி சரக உதவி இயக்குநர் சூர்யா, சேலம் மாவட்ட நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உதவி இயக்குநர் சூர்யா செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், மாநில அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையுடன் இணைந்து இந்த கண்காட்சியை ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியில் விற்பனை நடைபெறும்.அனைத்து ரக ஜவுளிகளுக்கும் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர பட்டுப் புடவைகளுக்கு 45 முதல் 55 விழுக்காடு வரை ரகத்திற்கேற்றவாறு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.இதற்கான அனுமதி இலவசமாகும்.