தென் கொரியாவில் புதிய வகை கரோனா!

பிட்டரின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது.

புதிய வகை கரோனா முந்தைய கரோனா வைரஸை காட்டிலும் 70 விழுக்காடு அதிவேகமாக பரவக்கூடியது என்பதால் அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

லண்டனிலிருந்து கடந்த நவம்பர் 22ஆம் தேதி தென் கொரியா திரும்பிய மூன்று பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மூவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.