ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு பல கோடி இழப்பீடு..!

தமிழகம், பிப்ரவரி 1-ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடியை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.5229.92 கோடி திரட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ரூ.565.54 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 14-வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது.