ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு !

ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது .ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகம் ஆன டி நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கிரிக்கெட் வீரர் டி நடராஜன் சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார்.

அவரை ஊர் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.மேலும் மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலமாக அவரை சென்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் அவரை வரவேற்க தடைவிதிக்கப்பட்டது. கைக்குலுக்குவதற்கும், சால்வை அணிவிப்பதற்கும் தடைவிதித்தது. மேலும், 14 நட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வரவேற்பு விழா நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அகற்றப்பட்டது.