நீட் தேர்வுக்கு குறையும் விண்ணப்பங்கள் !

Neet-2021

இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளின் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ம் வரை காலஅவகாசம் உள்ளது.இதற்கு மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறாயிரத்து 412 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.