விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லொஸ்லியா.தனது சுட்டி தனமான சுபாவம் மூலம் ரசிகர்களை தன் வசமாக்கியவர்.மேலும் இலங்கை நாட்டை சேர்ந்த இவரது தமிழ் மிகவும் பேசப்பட்டது.
மேலும் செய்தி வாசிப்பாளராக இவரது பணி தொடங்கியது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.இதில் லொஸ்லியா நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார்.இதில் லொஸ்லியா உடன் ஜோடி சேர்கிறார் பிக் பாஸ் புகழ் தர்ஷன்.நாளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யா ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.



