சீனாவை வாட்டி வதைக்கும் கனமழை !

கொரோனா என்கிற தொற்று சீன நாட்டிலிருந்து தான் உலகிற்கு பரவியது என்று சிலர் கூறுகின்றனர்.சீனாவின் வூகான் மாகாணத்தில் தான் இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.இது ஒரு புறம் இருக்க தற்போது சீனாவை கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக அங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஜெங்ஜோவில் பெரும்பாலான இறப்புகள் பதிவாகியுள்ளன.தெருக்களில் பெருகிய வெள்ளத்தால் கார்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்ளன.

சீனாவின் சின்ஹுவா நியூஸின் வீடியோ காட்சியில்,, 1.2 கோடிக்கும் அதிகமான குடிமக்களைக் கொண்ட ஜெங்ஜோ நகரத்தில் ஒரு மெட்ரோ பாதையின் உள்ளே கழுத்து ஆழமான நீர் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணம் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.25 பேர் இதுவரை மழைக்கு பலியாகியுள்ளனர். மேலும் சனிக்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை 617.1 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சுரங்கப்பாதைகள், தெருக்கள், ஹோட்டல்கள் மற்றும் ஏராளமான கட்டிடங்கள் நீரில் மூழ்கியது, இதனால் நகரத்தின் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.