வாட்ஸ் ஆப் மூலம் தங்கம் அனுப்பலாம்

ஆன்லைன் தளத்தில் வாங்கப்படும் தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்கவும், எவ்விதமான , அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தங்கம் திரட்டுதல் ( Gold accumulation ) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு டிஜிட்டல் தங்க விற்பனையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிஜிட்டல் முறையில் வாங்கப்படும் தங்கத்தை வாட்ஸ்அப் வாயிலாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் .வாட்ஸ்அப் தற்போது டிஜிட்டல் முறையில் வாங்கப்பட்ட தங்கத்தை மெசேஜ் வாயிலாக அனுப்பக் கூடிய வசதியை உருவாக்கியுள்ளது. சேப் கோல்டின் கீழ் வாங்கப்படும் தங்கம் அனைத்தும் 99.99 சதவீத தூய தங்கம். இத்தளத்தில் வருடத்தின் 365 நாட்களும், வாரத்தில் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் தங்கத்தை வாங்கவும், விற்கவும் முடியும்.