இன்றைய தங்கம் விலை

கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரிய தொடங்கியது.

வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. மேலும் பொருளாதார மந்த நிலை உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருகிறது.

நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4760 க்கு விற்பனையானது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராமானது ரூ‌ 4760 க்கு விற்பனையாகிறது.