Gold Rate: தங்கம் விலை தொடர் சரிவு

gold-rate-on-march-16th-2022-gold-prices-fall-as-investors-cautions-ahead-of-fed-decision
தங்கம் விலை தொடர் சரிவு

Gold Rate: தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றும் 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்திற்கு ஆதரவாக தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையினை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்கலாம். எனினும் மீடியம் டெர்மில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன.

இதற்கிடையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது எவ்வளவு? இந்திய சந்தையில் தங்கம் விலையானது எவ்வளவு? ஆபரண தங்கத்தின் விலை எவ்வளவு? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Taanakkaran: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’

ஆபரண தங்கம் விலையும் இன்று 3வது நாளாக குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, 4792 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 38,336 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, 5228 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து, 41,824 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.50 பைசா குறைந்து, 72.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 723 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 72,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதையும் படிங்க: Holiday Announcement: நாளை மறுநாள் அரசு விடுமுறை