ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

கடந்த மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தும் ஏற்றத்துடனும் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்து, ரூ. 39,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.38 குறைந்து ரூ.4,909 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.20 பைசா குறைந்து ரூ. 69.80-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.