உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி – கோவா !

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில்,கோவாவில் நடத்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கோவாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் பனாஜி மாநகர கார்ப்பரேஷனில் 30 வார்டுகளில் 25 வார்டுகளை வென்றது.முன்னதாக ஆறு நகராட்சி மன்றங்கள், பனாஜி மாநகரம், ஒரு ஜில்லா பஞ்சாயத்து மற்றும் 22 பஞ்சாயத்து வார்டுகளில் கடந்த சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு, இன்றே முடிவுகள் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு,2020 டிசம்பரில் நடைபெற்ற ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில், ஆளும் பாஜக 49 இடங்களில் 32 இடங்களை வென்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் நான்கு இடங்களை மட்டுமே கைப்பற்றியது.