ரெட் ஒயின் நன்மைகள் பற்றி தெரியுமா !

ரெட் ஒயின் என்பது திராட்சையிருந்து எடுக்கப்படும் திராட்சை ரசம்.இதை வெளிநாடுகளில் மக்கள் அதிகம் விரும்பி பருகுவர்.இதை அளவோடு எடுத்து கொண்டால் இதில் நிறைய நன்மைகள் உள்ளன.

ஒயினை அளவாக பருகி வந்தால் நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். குறிப்பாக இதய நோய், டைப் 2 சர்க்கரை நோய், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது இருதயத்தை மிகவும் பாதுகாக்கிறது.

சரும பிரச்சனைகளுக்கு ரெட் ஒயின் மிக சிறந்த ஒன்று.திராட்சையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்கள் உள்ளது. இந்த திராட்சையை கொண்டு ரெட் ஒயின் தயாரிக்க படுவதால் நம்முடைய இதயத்திற்கு மிகவும் நல்லது.இதில் அளவோடு பருகி வந்தால் சருமம் மினுமினுப்பு பெரும்.