கிரிவலம் செல்ல தடை !

திருவண்ணாமலை பெரிய கோவிலில் தீபத்திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கூறியது, வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்திட கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண்ணை, வாகன ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதி சீட்டு எடுத்து வர வேண்டும் என்றார்.

மேலும் 17ஆம் தேதி மதியம் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லவும் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யவும் அனுமதியில்லை. மற்ற நாட்களில் கிரிவலம் செல்லலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மழை காரணமாக 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !