தனியார் பள்ளிகளில் இலவச கல்வி

மாணவர்கள் தனியார் பள்ளியில் இலவச கல்வி கற்க தேவையான நடைமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவால் சென்ற வருடம் மூடிய பள்ளிகள் இன்று வரை திறந்தபாடில்லை. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் தான் கல்வியை கற்கின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட் போன் போன்ற வசதிகள் இருக்கும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வீட்டில் அத்தகைய வசதி இருக்காது என்பதால் அவரக்ளுக்கு ஒரு சிறப்பு ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளது.

மாணவர்களுக்கு கல்விதொலைக்காட்சி என்ற அலைவரிசையை புதிதாக தொடங்கி அதில் பள்ளிக்கூடத்தில் எப்படி பாடம் எடுக்கப்படுகிறதோ அதே போல் இந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும். இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதத்தில் இருந்து நடந்து வருகிறது.

இதனிடையே இலவச கல்வி திட்டம் மற்றும் கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் கூறியதாவது:- கல்வி கற்க முடியாத சூழலில் இருக்கும் மாணவர்கள் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர்வதற்கான நடைமுறைகள் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத்தகைய சேர்க்கைக்கு வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.