முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி !

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வயது 89 .காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.பிறகு அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார்.தற்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளது. அவர் நலம் பெற தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நேபாளத்தில் நடந்த கோர விபத்து !