பிரபல கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உல் ஹக் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

பின்னர் அவர் அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருக்கு வயது 51 .பாகிஸ்தானின் 375 போட்டிகளில் 11,701 ரன்கள் எடுத்துள்ளார்.அவர் நாட்டின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்தார்.

இன்சமாம் 2007 இல் சர்வதேச விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார், பின்னர் பாகிஸ்தானில் ஒரு பேட்டிங் ஆலோசகராகவும் பின்னர் 2016 முதல் 2019 வரை தலைமை தேர்வாளராகவும் பல பதவிகளை வகித்துள்ளார்.

அவர் ஆப்கானிஸ்தானின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.அவர் விரைவில் குணமைடைய ரசிகர்கள் பிராத்தனை செய்கின்றனர்.

இதையும் படிங்க : தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி !